February 27, 2021, 10:41 pm

இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறைமாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வட கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப் போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

Related Articles

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...

தமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...

யாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்

யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...