இந்தியாவில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. இன்று காலை 11.00 மணியளவில் தடுப்பூசிகளை ஏற்றிய எயார் இந்தியா விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனை, ஹோமாகம அடிப்படை மருத்துவமனை, கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை மற்றும் அங்கொடவில் உள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (ஐடிஎச்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களிற்கு தடுப்பூசி போடப்படும்.
ஒரு நாளில் இந்த மருத்துவமனைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். 4 நாட்களில் அனைத்து ஊழியர்களிற்கும் தடுப்பூசி போடப்படும்




