ஆணையிறவு தட்டுவன்கொட்டியில் கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள சிவன் சிலைக்கான அடிக்கல்லை இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நாட்டிவைத்தார்.குறித்த நிலையானது 27 அடி உயரத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் சின்மயா மிசன் சுவாமிகள் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வர் இந்து சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்





