உத்தேச காட்டுயானை பாதுகாப்பு சரணாலய வலைய திட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி, சூரியவவ – வல்சப்புகலயில் விவசாயிகள் நடத்துகின்ற போராட்டம் இன்றுடன் 10வது நாளை எட்டியுள்ளது.
இன்று அவர்களுக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் இணைந்துக் கொண்டன.
இதேவேளை, மணல் வியாபாரிகளால் ஏற்படுகின்ற சூழல் மாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாம்பே – சுதுவெல்ல பகுதியில் கிராமவாசிகளால் தொடர்ந்து ஐந்து நாட்களாக முன்னெடுத்த போராட்டம் இன்று நிறைவு செய்யப்பட்டது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர , இந்த பிரச்சினையைத் தீர்ப்பதாக உறுதியளித்த நிலையில், கிராமவாசிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.