March 7, 2021, 9:03 am

முதல்வராக வருவதற்கு உதவிய அந்த 06 கட்சியினருக்கும் நன்றி!

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக வருவதற்கு உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா உள்ளிட்ட பலருக்கும் தனது நன்றியை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபை மண்டபத்தில் இடம் பெற்றபோதே அவர் இந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் மேயராக நான் வருவதற்கு 06 கட்சியினர் உதவியுள்ளனர். அதாவது தேர்தலிலே சந்தர்ப்பம் வழங்கி சபையின் உறுப்பினராகுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தர்ப்பம் வழங்கியது.

எனது உறுப்புரிமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கிலே எனக்கு எதிராக வாதாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அந்த வழக்கை மீளப்பெற்று நான் மேயராகுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கினார்.

யாழ். மாநகர மேயர் தேர்விலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் ஆனோல்ட்டை போட்டியிட வைத்து என்னை வெல்ல வைக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா உதவினார்.

பழைய மேயரின் வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது வாக்களிக்கச் சபைக்கு வராது அந்த பட்ஜட் தோல்வியடைய ஐக்கிய தேசியக் கட்சியினர் உதவினர்.

பின்னர் மேயர் தேர்வின்போது எனக்கு ஈ.பி.டி.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.

ஆகவே, இந்த 06 கட்சியினருக்கும் எனது நன்றி – என்றார்.

Related Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

Stay Connected

6,575FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...