February 28, 2021, 2:51 am

10 பேர்ச் காணி வழங்க யோசனை

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்க வழங்கப்படும் ஏழு பேர்ச் காணிக்கு பதிலாக வீட்டுத்திட்டத்தில் சிறு விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் பத்து பேர்ச் காணியை வழங்க வேண்டும் எனவும் அமைச்சரவைக்கு இந்த விடயத்தை கொண்டு செல்ல வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி. புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தற்போது பெருந்தோட்ட யாக்கங்கள் வீடமைப்பு திட்டத்தை முன்னெடுப்பதற்கு நிலங்களை வழங்குவதில் முழுமையான விருப்பம் தெரிவிப்பதில்லை சில நேரங்களில் நீதிமன்றங்களை நாடவேண்டியுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க ஏழு பேர்ச் காணி கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. அதுவும் முறையாக வழங்கபடவில்லை. இனிவரும் காலங்களில் அமையபெறும் வீட்டுத்திட்டத்தில் சிறு விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் பத்து பேர்ச் காணியை வழங்க அமைச்சரவைக்கு இந்த விடயத்தை கொண்டுசெல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் அண்மைக்காலமாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளிகள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வருகின்றனர். இதுவரைக்கும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொழிலாளர்களை குளவி கொட்டிலிருந்து பாதுகாப்பதற்கு விசேடமான ஆடை தயாரிக்கப்பட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் பயிர்ச்செய்கையின் பரம்பல் தொடர்பாகவும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நுவரெலியாவில் அழிந்து போயுள்ள பெயாஸ் உற்பத்தியை மீண்டும் அதிகரிப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கும் விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அதற்கு தேவையான அறிக்கை ஒன்றையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.

Related Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 460 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 460 பேர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,430 இலிருந்து...

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 460 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 460 பேர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,430 இலிருந்து...

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...

தமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...