March 7, 2021, 8:15 am

மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்

இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.

எனினும், கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களை இலக்கு வைத்து மாத்திரம் இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் இன்று முதல் 907 பாடசாலை மாத்திரம் 11ம் தர மாணவர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதம் 01ம் திகதியிலிருந்து 11ம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக மேல் மாகாணத்தில் 79,000 மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் அவர்கள் தவறவிட்ட கற்றல் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்காக இம் முடிவை எடுத்ததாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் கல்வியமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் அதன்படி அனைத்து பாடசாலைகள் தொடர்பிலும் பொதுவான முடிவொன்றை இசுறுபாய மூலம் வெளியிடுவது சாத்தியமற்றது என்பதால் மாவட்ட அபிவிருத்தி குழுவினூடாக முடிவினை எடுப்பதே மிகவும் சரியானது என பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ம் திகதிக்கு முன்னர் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் அங்கத்தவர்கள் மற்றும் பிரதேசத்தின் ஏனைய சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் இவ்விடயம் தொடர்பாக விசேட சந்திப்புகளை நடத்தி அவதானத்துக்கு முகங்கொடுத்து தற்போது ஆரம்பிக்கக்கூடிய பாடசாலைகள் தொடர்பில் முடிவுசெய்து கல்வியமைச்சுக்கு அறிவிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 1576 ஆகும். அவற்றில் 900 பாடசாலைகளை சுகாதார பரிந்துரைகளின்படி திறக்கக் கூடியதாக உள்ளதெனவும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி அளவில் காணப்படும் நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார அதிகாரிகள் பெற்றுக்கொடுக்கும் ஆலோசனைகளை அடிப்படையாகக்கொண்டு சரியான நடைமுறையின் கீழ் மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய வகுப்பு மாணவர்களுக்காகவும் படிப்படியாக பாடசாலைகளை திறக்க முடியுமென கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

Stay Connected

6,575FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...

இந்த ஆப் எல்லாம் உங்க போன்ல இருக்கா ? – எச்சரித்த கூகிள்!

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை உடனே டெலிட் செய்யவும். இதோ...