March 1, 2021, 9:23 am

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசு தின கொண்டாட்டம் இரத்து?

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற சம்பவத்தில் தகர்ந்தது. இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த நால்வரும் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் தற்போது வரையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட சர்ச்சையும் பதற்றமும் தமிழகத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

இந்தநிலையில், இதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கிலும், இந்த மீனவர்களின் இறப்பின் துயரில் பங்கெடுக்கும் வகையிலும் எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியாவின் குடியரசுத் தினக் கொண்டாட்ட நிகழ்வு இரத்துச் செய்யப்படுவதாக அறியவருகின்றது.

இந்தக் கொண்டாட்டம் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இங்கும் மிகவும் கோலாகலமாக இடம்பெறுவது வழமை.

இந்த ஆண்டு கொரோனா காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட போதும் அரசியல் சூழல் காரணமாக குடியரசுத் தினக் கோலாகலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இராஜதந்திர நிகழ்வுகள், நெருக்கடிகள் காரணமாக இலங்கை – இந்திய அரசியலிலும் உறவிலும் பெரும் பரபரப்பு நிவுவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

கிளிநொச்சியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் தொடங்கியது.சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய போராட்டம் கிளிநொச்சி பழைய கச்சேரி வரையான பகுதிவரை நகர்கிறது.போராட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

நெடுந்தூர பேருந்து ஓட்டுநர்களும் யாழ் மாநகர முதல்வருக்கும் இடையில் முறுகல்!!

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.புதிதாக...

யாழ்ப்பாணம் நல்லூரில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது.இலங்கை...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சிறீதரன் எம்.பி யிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் புதுக்குடியிருப்பு பொலீசாரினால் இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில்...

“தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய்? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய்” தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார் ICBT Campus நிறைவேற்று...

தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய் , இவ்வாறெல்லாம் தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார்,...