பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.
பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ் வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டம் தொடர்பான சாத்திப்பாட்டு அறிக்கையினை பெறும் நோக்கில் இன்று பளை பொது சந்தைக்கு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் திட்டமிடல் பகுதி அதிகாரிகள் வந்து தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இங்கு சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்