யாழ்.பரிசோதனைக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனாப் பரிசோதனைகளில் மேலும் 29 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மன்னாரில் 23 பேரும், வவுனியாவில் ஆறு பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே யாழ்.சங்கானைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இ.போ.ச ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்திருந்தமை தெரிந்ததே.
இதேவேளை கொழும்பு ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த 20 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் வடக்கில் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது.