March 5, 2021, 1:05 pm

குருந்தூர் மலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் தமிழரும் இணைப்பு?

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடாத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த கோரிக்கையை அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று (20) பாராளுமன்றில் சீனி இறக்குமதி வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில் அரசின் கெடுபிடி அதிகரித்துள்ளது. திடீர் திடீரென புத்த கோவில்கள் முளைப்பதும் அதனைத் தொடர்ந்து பிரச்சினைகள் வருவதும் தொடர்கின்றது.

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுமுள்ளது. அதில் மக்களின் வழிபாட்டை தடுக்கக்கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு சில நாட்களுக்கு முன்னர் பொங்கல் வழிபாடு செய்ய சென்றவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டுள்ளது. இந்த தொல்பொருள் ஆராய்ச்சியை ஏன் மறைமுகமாக செய்ய வேண்டும்?

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் வந்து ஆராய்ச்சி செய்யும் ஏற்பாட்டை அரசு செய்கிறது. நாம் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் பங்குபற்ற வேண்டுமெனக் கோரினோம்.

தலைவர் இரா.சம்பந்தன் இவ்விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் கதைத்த போது யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க அவர் இணங்கியுள்ளார்.

இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாய்ப்பேச்சில் மட்டும் இருக்கக்கூடாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்

நாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட...

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...

பளையில் எரிபொருள் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பளை நகரத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை(05) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்

நாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட...

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...

பளையில் எரிபொருள் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பளை நகரத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை(05) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கு நியமனங்கள்

வடமாகாண விவசாயப் போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிமை (04) பிற்பகல்- 04 மணி முதல் யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சாள்ஸ் தலைமையில்...

மன்னார் வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்தக் கோரி மக்கள் போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான வீடுகளை முழுமையாக பூரணப் படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(5) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக...