February 27, 2021, 10:08 pm

அடிக்கடி சென்றுவரும் வீட்டில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்..!

யாழ்.பருத்துறையில் சம்பவம், பெண்ணும் அவருக்கு உதவியவரும் விளக்கமறியலில்.. யாழ்.பருத்துறை பகுதியில் வீடொன்றில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்ணையும், அவருக்கு உதவிய ஆணையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிக்கடி சென்று வரும் வீட்டிலேயே அந்தப் பெண் திருட்டில் ஈடுபட்டுள்ளார். பருத்தித்துறை நகரில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் காணாமற்போயிருந்தன. அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.வீட்டில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 19 பவுண் தங்க நகைளைக் காணவில்லை என்றும் தமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் பெண் ஒருவரில் சந்தேகம் உள்ளது என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை குற்றத் தடுப்பு பொலிஸார், முறைப்பாட்டில் சந்தேக நபராகத் தெரிவிக்கப்பட்டிருந்த பெண்ணை நேற்றுக் கைது செய்தனர்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 10 தங்கப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபர்கள் இருவரும் இன்று பருத்தித்துறை நீதிவான்நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை வரும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதேவேளை, இந்த திருட்டுடன் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடிவரும் பொலிஸார், சந்தேக நபர்களுக்கு வேறு கொள்ளை சம்பவங்களுடனும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...

தமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...

யாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்

யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...