February 27, 2021, 12:06 pm

உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறக்க தீர்மானம் !

எதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளிடம் இருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் 30 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப இது பெரும் உறுதுணையாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 26ஆம் திகதி விமான நிலையங்களை திறக்கும் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைனில் இருந்து 1,500 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தனர். அதன் மூலம் நாட்டுக்கு 420 மில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.

நாட்டுக்கு வரும் உல்லாச பயணிகள் 72 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை சமர்ப்பிப்பது அவசியம். அதனூடாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என காணப்பட்டால் மாத்திரமே அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர்.

நாட்டுக்கு அவர்கள் வருகை தந்ததும் ஹோட்டல்களில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக PCR பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படும். அதன் பின்னரும் 5-7 நாட்களுக்குள் அவர்கள் மீண்டும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன் பின்னரே அவர்கள் சுற்றுலா தொகுதிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டு அங்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும்.

சாதாரண சமூகத்துடன் அவர்கள் தொடர்புகளைப் பேண எந்த சந்தர்ப்பமும் கிடையாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...

தா. பாண்டியன் வாழ்க்கை வரலாறு…

மதுரை மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில்...