ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் துன்புறுத்தல்கள் மற்றும் ஏனைய பல காரணங்களினால் ஓமானில் சிக்கியிருந்த நிலையில் இருந்தவர்கள் என கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -206 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையித்திற்கு இவர்கள் வருகை தந்துள்ளனர்.