நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருக்கும் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களில் திறக்கப்படும் என அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினுடாக அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவுடன் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிய போதிலும் திறக்கப்படாமல் இருப்பதால் குறித்த கட்டடம் வீணாகுவது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தின் தேவை குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இரு வாரங்களில் வவுனியா பொருளாதர மத்திய நிலையத்தினை திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என என்னிடம் உறுதி அளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.