தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் 100 மாணவர்களிற்கு குறித்த உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முதலாம் கட்டமாக பச்சிலைபள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்ப்பட்ட இத்தாவில் கோவில்காடு மாணவர்களிற்கு இவ் உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் கஜன் உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்




