முல்லைத்தீவு – துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து நேற்று முன்தினம் (13) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு சென்று வருகின்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து தடையவியல் குற்றப் பொலீஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.