February 25, 2021, 9:48 pm

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகுமா? 

நான்கு வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சட்ட ரீதியாக எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்காக குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 06 மாதங்களுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி சட்டரீதியாக இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹோவா குறிப்பிட்டார்.

எனினும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தண்டனையை இடைநிறுத்தினால் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவி நீக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 6 மாதங்கள் தண்டனையை அனுபவிக்கும் பட்சத்தில் அவருக்கான பதவி, விருப்புவாக்கு பட்டியலில் அடுத்து உள்ளவருக்கு சென்றடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹோவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானம் குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவிடம் நாம் வினவிய போது, சட்டத்தரணிகளின் ஆலோசனை பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...