February 27, 2021, 12:09 pm

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொங்கல் வாழ்த்து செய்தி

எமது மக்களின் வாழ்விடங்களிலும் ஒவ்வொரு இல்லங்களிலும் புது மகிழ்ச்சி பொங்கிடுமென்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாள் என்றும் தமிழர் பெருநாளென்றும் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடி வரும் எமது மக்கள், இயற்கையை வணங்கிய எமது முன்னோர்கள் வழிநின்று தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் காலந்தோறும் பாதுகாத்து வருகின்றனர்.

வாழ்வெங்கும் வலி சுமந்த எமது மக்கள் தை பிறந்தால் வழி பிறக்குமென்ற நம்பிக்கையில் பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாள் தம் வாழ்வில் புது மகிழ்வை தந்திடும் என்று எத்திர்பார்ப்பதை நான் உணர்கின்றேன்.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டை கொண்ட எமது மக்கள் மலர்ந்து மறையாக ஒளிச்சுடராக தம்முடன் வாழ்ந்து தமது துயர் துடைப்பவர்களுக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டையும் மேலும் வளர்க்க வேண்டும்.

‘வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்று பாரதி பாடியது போல், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல உரிமைகளையும் வென்றெடுத்து தமிழர் தேசமெங்கும் ஒளியேற்ற எம்மிடமுள்ள வல்லமைக்கு பலம் வேண்டும்.

எமது வல்லமைக்கு பலம் சேர்க்கும் மாபெரும் சக்தியாக தமிழ் மக்கள் திரண்டு விட்டால் யாமார்க்கும் அடிமையல்லோம் யமனை அஞ்சோம், நரகத்தில் இனி இடர் படோமென தமிழ் மக்கள் நிமிர்ந்தெழும் காலம் இங்கு உருவாகும்.

கொடிய நோய் பிணிகள் தீர்ந்து எமது மக்கள் குதூகலித்து வாழவேண்டும். பதற்றங்களும் அச்சம் தரும் சூழலும் இனியிங்கு இல்லையென்ற நிலை நீடித்து நிலவ வேண்டும். வறுமையற்ற வாழ்வு மலர வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்வுயர வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடுகளும், நிலமற்ற மக்களுக்கு காணி நிலங்களும் வேண்டும். உறவுகளை இழந்து தவிக்கும் எமது மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் வேண்டும்.

எம் மக்களின் உறவுகள் சிறை மீண்டு வர வேண்டும். இறந்த உறவுகளுக்கு நீதிச்சட்டங்களை ஏற்று அஞ்சலி செலுத்தும் எமது மக்களின் ஆழ்மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.

எமக்கென்றொரு கனவுண்டு. அது தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வாகும். அது நிறைவேற வேண்டும் என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...

தா. பாண்டியன் வாழ்க்கை வரலாறு…

மதுரை மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில்...