இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயாளரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.எனினும், குறித்த நோயாளர் யார் என்பது தொடர்பில் தகவல்களை வழங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் சோதனையிடுவற்கான 12 தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.