போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து மற்றொரு தரப்பினருக்கு விற்பனை செய்யும் குழு தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
போலியான அடையாள அட்டைகள் மற்றும் மின்சாரப் பட்டியலை வழங்குவதன் மூலம் வாகனங்களை வாடகைக்குப் பெற்று அவற்றைப் பகுதிகளாக விற்பனை அல்லது முழு வாகனத்தையும் விற்பனை செய்வதாகவும் இம்மோசடி சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சந்தேகநபர்கள் யக்கல மற்றும் மிரிகம பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 17 போலியான வாகனங்களை முல்லேரியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர்கள் இருந்தால் முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று 17 வாகனங்களில் உங்களின் வாகனம் இருக்கிறதா? என பரிசோதனை செய்து பார்க்க சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.