இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (12) அறிவித்துள்ளார்.
241ஆவது மரணம்
கொழும்பு 13, (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) மாற்றப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) அங்கு மரணமடைந்துள்ளார்.
இவரதுவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவுடன், உறுப்புகள் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
242ஆவது மரணம்
ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று (12) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
243ஆவது மரணம்
மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர், மாத்தளை பொது வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று (12) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக இதயத்திற்கான குருதி வழங்கல் குறைவடைந்தமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
244ஆவது மரணம்
வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று (12) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், பக்கவாதம் மற்றும் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 240 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 04 மரணங்களுடன் இதுவரை 244 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.