February 25, 2021, 3:59 pm

பூரண ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் -மாவை

நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கில் நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அரச நிர்வாகம் இடித்து அழித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ் மக்களின் நினைவிடங்கள் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் வடக்கு – கிழக்கு தழுவிய மாபெரும் ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சியினர், சர்வமத பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவிடங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதும் உலகப்பொது நீதி. அதையும் மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் ஆன்மாவை உலுக்கியுள்ளது.

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வரிசையாக நசுக்கி வரும் இந்த அரசின் சிந்தனையின் இறுதி வடிவமாக, யாழ். பல்கலைகழகத்தில் அமைந்திருந்த தூபியை இடித்தழிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.

எஞ்சிய எமது நினைவிடங்களையாவது பேணிப் பாதுகாக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் நினைவிடங்களைக் கௌரவமாகப் பேண வேண்டும்.

எமது நிலைப்பாட்டை ஜனநாயக வழியில், அழுத்தம் – திருத்தமாக எதிர்வரும் திங்கட்கிழமை அரசுக்குச் சொல்வோம்.

இதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்து, நாளைய ஹர்த்தால் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம்” – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...

ஏப்ரல்21 தாக்குதல்:ஆணைக்குழு அறிக்கையை சுதந்திர கட்சி நிராகரித்தது

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் இலங்கை தொடர்பாக நிலவுகின்ற விடயங்களில் இறுதியானதும், வினைத்திறனானதுமான தீர்வொன்றைக் தேடுவதற்கான அர்ப்பணிப்பின் ஊடாக நாம் வழிநடத்தப்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது...