இறந்தவர்களுக்கான நினைவுத்தூபி ஆனது அவசியமான ஒன்று எனவும் இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அது அவசியமான ஒன்றாகும் என மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
நல்லாட்சி காலப்பகுதியில் தாம் பாராளுமன்றில் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்ததாகவும் அதற்கு அன்றிருந்த தமிழ் கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை எனவும் குறித்த தூபியானது இரவோடு இரவாக கட்டப்பட்ட ஒன்று எனும் செய்தியும் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அது சட்டவிரோதமான முறையில் அனுமதி பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் அதனை அகற்றியதாகவும் யாழ் துணை வேந்தர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் தலைமைகள் நீண்டகால தேவைகளை கருத்திற்கொள்ளாது இவ்வாறான விடயங்களை அரசியல் உள் நோக்கத்திற்காகவே முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சுயலாப அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விடயங்களின் காரணமாகவே எமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இரு நாடு ஒரு தேசம் சமஸ்டி என குறிப்பிட்டவர்கள் தற்போது அதனை கைவிட்டு 13வது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறைமை என்பவற்றை முன்னெடுக்க வேண்டுமென்று தெரிவிக்கின்றனர்இ 33 வருடங்களுக்கு முன்பு நாம் அதனையே குறிப்பிட்டிருந்தோம் ஆனால் அதனை எவரும் பொருட்படுத்தவில்லைஇ அன்று இதனை கருத்தில் கொண்டு இருந்தால் தமிழ் மக்கள் இன்று எதிர் நோக்கியிருக்கும் அழிவிலிருந்து தப்பித்து இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த விடயம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் தாம் ஆலோசிக்க போவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்