February 27, 2021, 3:18 am

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனம் -இயக்குனர் கௌதமன்!

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனம் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. ளெதமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. மனித குலத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் ரசாயனக் குண்டுகளையும் வீசி இரக்கமற்ற முறையில் இலங்கை அதிகார வர்க்கம் எம் தமிழர்களை பச்சை படுகொலை செய்தது. முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்து 12 ஆண்டுகள் கடந்தும் கூட நீதி கிடைக்காத நிலையில் உலகத் தமிழினம் போராடிக் கொண்டிருக்கிற இச்சூழலில் எங்களின் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை தலைக்கவசம் அணிந்த இராணுவக் கும்பல் இரவில் வந்து இடித்து தள்ளியிருப்பது கோழைத்தனத்துடன் கூடிய காட்டுமிராண்டித்தனம்.

இதனை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

எப்பொழுதுமே நேர்மையற்ற, அறமற்ற முறையில் இனப்படுகொலை செய்யும் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு இச்செயல் ஒன்றும் புதிதல்ல. நீங்கள் நினைக்கலாம் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை அழித்துவிட்டால் தமிழர்களின் மனதிலிருக்கும் நினைவு சுவடுகளை அழித்து விடலாம் என்று. வடக்கிலோ கிழக்கிலோ இருக்கின்ற எம் இனத்தின் இளைய தலைமுறை மாணவ செல்வங்களின் மனதிலிருக்கும் வலிமிகுந்த யுத்த வடுக்களை ஒருபோதும் அழிக்க முடியாது. “எழும் சிறுப்பொறி மிகப் பெரும் தீயாய்” என்கிற இயற்கையின் பேருண்மையை உள்வாங்கி ஓர்நாள் அந்த மனங்கள் எரிமலையாய் வெடிக்கும். இதனை அறியாத சிங்கள அதிகாரவர்க்கம் சிறுபிள்ளைத்தனமாக எம் இனவழிப்பின் நினைவுச் சின்னத்தை சிதைத்திருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதியாக சொல்வோம். எங்கள் நினைவு சின்னங்களையும் எங்களின் கலை, பண்பாடு மற்றும் வரலாற்று பதிவுகளையும், ஏன் எங்களின் வரைபடத்தையும் கூட நீ அழிக்கலாம். நீங்கள் அழிக்க அழிக்கத்தான் எங்களுக்கு சூடும் சொரணையும் வரும் அல்லது கூடும். விரைவில் எங்களுக்கான உறுதியான இறுதி தீர்வை எட்டுவதற்கான திட்டத்தினை உருவாக்க நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள். உங்களின் அத்துமீறலை தொடர்ந்து கொண்டேயிருங்கள். இவ்வுலகின் நீதிமன்றங்களும் மனிதம் காக்க உருவாக்கப்பட்ட ஐநா சபையும் இன்னும் எவ்வளவு காலம்தான் உங்களுக்கு துணை நிற்கும் அல்லது உங்கள் அடக்குமுறைக்கு அரணாக காத்து நிற்கும் என்று நாங்களும் பார்க்கிறோம். தொடர்ந்த இக்கு௹ரங்களை உலகம் கணக்கில் எடுக்கிறதோ இல்லையோ ஐம்பதனாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழினத்தின் இளைய தலைமுறை நடப்பதனைத்தையும் நெஞ்சத் தகிப்போடு உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.

வரலாறு கூட சில நேரங்களில் மறைக்கப்படலாம் அறிவியலை ஒரு போதும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

“ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு”.

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்.

வெல்வோம்.

வ.கெளதமன்

பொதுச்செயலாளர்,

தமிழ்ப் பேரரசு கட்சி,

“சோழன் குடில்”

09.01.2021

Related Articles

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் இராஜாங்க அமைச்சர் அஜித்

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் இன்று (27) யாழ்ப்பாணம் பல்கலைக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 497பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 497 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,933 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 459 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் இராஜாங்க அமைச்சர் அஜித்

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் இன்று (27) யாழ்ப்பாணம் பல்கலைக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 497பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 497 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,933 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 459 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

இதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா?

நாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...

மக்கள் அறம் என்ற எண்ணக்கருவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு தொடர முடியுமா?20ம் திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை என்ன??

முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல்...