யாழ். பல்கலைக்கழகத்தினுள் இன்று நள்ளிரவு வேளை அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
அவர்களை விடுவிப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மே 18 நினைவாலயம் இன்றிரவு இடிக்கப்பட்டதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக முன்றலின் வீதியில் அமர்ந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.