March 8, 2021, 1:18 pm

நேர்மையான அரச அதிகாரி எவரும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை பெற்றுத்தருவோம்- மஹிந்த

நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றிய எந்தவொரு அரச அதிகாரியும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை பெற்றுத்தருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

கிராமத்துடன் கலந்துரையாடலின் மூலம் வேலைத்திட்டத்துடன் கிராமத்திற்கு தேசிய வேலைத்திட்டத்தின் அரச அதிகாரிகளுக்கு தௌிவூட்டும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2021 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாம் பாரிய தொகையை உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்துள்ளோம்.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்று எமது விமர்சகர்கள் எம்மீது குற்றும் சுமத்தினர். எனினும் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காரணமின்றி நிதியை ஒதுக்கும் திட்டங்களை ஆரம்பித்ததில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தேர்தலை எதிர்பார்த்து எவ்விடயமும் இவ்வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் மக்களுக்கு அவ்வாறான மோசடிகளை செய்யமாட்டோம் என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் அவ்வாறு செய்யப்போவதில்லை.

இந்த வரவு செலவுத் திட்டம் கிராம விவசாயிகள், மீனவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மேம்படுத்துவதற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவை செயற்படுத்துவதற்கு எமக்கு சர்வதேச நிபுணர்கள் அவசியமில்லை. அதனால் இவ்வரவு செலவுத் திட்டத்தை எமது அரச அதிகாரிகளே செயற்படுத்தவுள்ளனர். இதனை நீங்களே கொண்டு செல்லவுள்ளீர்கள்.

இது கடினமானதொன்று என்பது எமக்கு தெரியும். எனினும்,  அந்த கடினமான பணியை நீங்களே நிறைவேற்ற வேண்டும். இதுவரை செய்ததும் நீங்களே. அதுவும் எமது நாட்டின் கிராம மக்களுடன் ஒன்றிணைந்து. அம்மக்கள் தொழில் முனைவோருக்கான அறிவை பெற்ற, பெரும் பயிற்சி பெற்ற, நிறுவனங்களில் பணியாற்றி தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல. அவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நேரிடும். அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை குறைத்துக் கொள்ள வேண்டும். அரச அதிகாரிகளான நீங்கள் அரசாங்கத்தின் கருத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது மக்களின் தேவை எமக்கு புலப்படும். மேலும் ஒரு இயற்கை அனர்த்தத்தின் போது வெள்ள நிவாரணம் வழங்கியதற்காக முன்னாள் இராணுவ தளபதியை எப்.சி.ஐ.டி.க்கு அழைத்து விசாரணை நடத்தியிருந்தமை எனக்கு ஞாபகம் இருக்கின்றது. சில் உடைகள் வழங்கியமைக்காக ஜனாதிபதி செயலாளர், தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்ழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் சிறை வைக்கப்பட்டமை நீங்கள் அறிவீர்கள். நாம் இந்நிலையை நன்கு உணர்ந்துள்ளோம்.

எனவே இதற்கு நாம் தீர்வொன்றை வழங்குகின்றோம். நேர்மையுடன் சேவையாற்றிய எந்தவொரு அதிகாரிக்கும் தண்டனை வழங்க முடியாது. எனவே அதற்கு தேவையான அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு நாம் எதிர்பார்கின்றோம். சில் உடை வழக்கிலிருந்து விடுதலையான லலித் வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் மக்களுக்கு என்ன கூறினர்? நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றும் எந்தவொரு தருணமும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தாது என்பதாகும். எனவே, காணப்படும் சட்ட திட்டங்களுக்கு மேலாக இந்த நிதி மக்களின் நலனுக்காக உபயோகிக்கும் முறை குறித்து அனுபவம் வாய்ந்த நீங்கள் அறிவீர்களாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

பாட்டலி சம்பிக்க மீது எதிர்வரும் 31ம் திகதி வழக்கு

பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும்...

எரிவாயுவின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு !

உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.அதற்கமைய இன்றைய (08) அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு விலை அதிகரிப்பு யோசனை...

பெருந்தோட்ட அதிகாரிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடியாது-சரத்வீரசேகர

பெருந்தோட்டங்களில் பணி புரியும் முகாமையாளர்களுக்கு ஆயுதப்பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்க கோரி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.தொழிலாளர்களை முறைக்கேடாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்ற சாமிமலை – ஹொல்ட்டன் தோட்ட முகாமையாளர் பொதுமக்களால் தாக்கப்பட்டதை அடுத்து, இந்த...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பாட்டலி சம்பிக்க மீது எதிர்வரும் 31ம் திகதி வழக்கு

பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும்...

எரிவாயுவின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு !

உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.அதற்கமைய இன்றைய (08) அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு விலை அதிகரிப்பு யோசனை...

பெருந்தோட்ட அதிகாரிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடியாது-சரத்வீரசேகர

பெருந்தோட்டங்களில் பணி புரியும் முகாமையாளர்களுக்கு ஆயுதப்பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்க கோரி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.தொழிலாளர்களை முறைக்கேடாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்ற சாமிமலை – ஹொல்ட்டன் தோட்ட முகாமையாளர் பொதுமக்களால் தாக்கப்பட்டதை அடுத்து, இந்த...

பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க திட்டம்

பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்படாத காணிகளை தோட்ட மக்களுக்கும் தோட்டங்களை அண்மித்து வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றது.குறித்த காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்காக மக்களுக்கு பகிர்ந்தளிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர்...

சம்பந்தர் போன்ற ஆளுமை தெற்காசியாவிலேயே இல்லையாம் – சாணக்கியன்

திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது.சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டனர்.இதன்போது திருகோணமலை...