February 25, 2021, 7:01 am

ரூபா 1,000 சம்பள உயர்வு பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவு!

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது.

நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தையில் புதிதாக செய்து கொள்ளப்படவிருக்கும் கூட்டு ஒப்பந்த கருத்துக்களில் தொழிலாளர்களுக்கு பாதகமான ஏதாவது அம்சங்கள் இடம்பெறுமாயின் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் சிக்கல்கள் ஏற்படுமென்றும் இ.தொ.கா வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் ரூபா 1,000 சம்பள அதிகரிப்பு தொடர்பாக கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்ற போதிலும் சம்பள உயர்வில் நியாயத் தன்மை ஏற்படவில்லை

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 1,000 சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் எந்நேரமும் இருந்து வந்திருக்கின்றனர்.

இக் கலந்துரையாடலில் இ.தொ.கா சார்பில் அதன் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் பெருந் தோட்டங்களுக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் இராஜதுரை, நிர்வாக உபதலைவர் மாரிமுத்து, உபதலைவர் மதியுகராஜா, இ.தொ.காவின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான பரத் அருள்சாமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபா 1,000 சம்பள விவகாரம் ஆராயப்பட்டது.

எனினும் முதலாளிமார் சம்மேளனம் விட்டுக்கொடுக்காத நிலையில் அடுத்த பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிடாமலே முடிவுக்கு வந்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் ரூபா 1,000 சம்பளத்தை வர்த்தமானி மூலம் அறிவித்து அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசாங்கம் பெற்றுத் தந்தால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக்கொள்வதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

இன்றைய ராசி பலன்கள் 25/02/2021

மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 458 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,009 இலிருந்து...