29.8 C
Jaffna
Friday, May 7, 2021
Home இலங்கை

இலங்கை

வவுனியாவில் முகக்கவசம் அணியாத 30 பேர் மீது வழக்கு

வவுனியா நகரப்பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 30 ற்கும் மேற்பட்டோர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி றொசான் சந்திரசேகர தலைமையிலான...

பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவத் தயாராகியுள்ளதாக இராஜாங்க...

யாழில் மருத்துவ வசதிகள் மட்டுப்பாடு – பொது மக்களை அவதானமாக இருக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை !

யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில்...

தமிழக மக்கள் மகிழ்வுடன் வாழும் நீதி ஆட்சி மலர வேண்டும் – தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து

ஈழத் தமிழ் மக்களின் நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழக மக்கள் நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் முதலமைச்சராக...

யாழ்ப்பாணத்தில் நீண்டநாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் பொலிசாரால் கைது!

யாழ்ப்பாண நகர பகுதியில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பிடியானை உள்ள நிலையில் அவர் தொடர்பில் யாழ்ப்பாண...

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் விபத்து – இருவர் பலி!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி...

இலங்கையில் 20 இலட்சம் முகநூல் கணக்குகளை முடக்க நடவடிக்கை!

இலங்கையில் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்களைக் கொண்டிராத சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய...

பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது!

வெளிநாட்டில் தங்கியுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கிம்புலா எல குணாவின் போதைப்பொருளை விநியோகித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காவற்துறையின் விசேட அதிரடிப்படையினர் கொழும்பு - புளுமண்டல் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் இவ்வாறு கைது...

மதுவரித்திணைக்களத்தின் அனுமதி பெற்ற இடங்களில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

மதுவரித்திணைக்களத்தின் அனுமதி பெற்ற சகல இடங்களிலும் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த முதலாம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு...

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகள்

இலங்கையின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை காவல்துறை அதிகார...

ஏழு நாட்கள் நாட்டை முற்றாக முடக்க கோரிக்கை!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர கொவிட் -19 வைரஸ் தொற்று நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் குறைந்தபட்சம் 07 நாட்களாவது நாட்டை முற்றாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர்...

வாழ்த்து அனுப்பினார் அமைச்சர் டக்ளஸ்!

தமிழகத்தின் மீனபிடித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக பதிவியேற்கவுள்ள அனிதா ஆர். இராதாகிருஸ்ணனுக்கு வாழ்த்துக்களை யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.எதிர்காலத்தில் கடற்றொழிலாளர் சார்பான விவகாரங்களில் இருவரும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 1,895 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,895 பேர் நேற்று (06) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 117,529 இலிருந்து...

இலங்கையில் மேலும் 11 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (06) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 734 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

இலங்கையில் தயாராகும் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்!

இலங்கையின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை சீதுவ பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ளது.கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...

ஊழியர்களின் சம்பள விடயத்தில் உயர் அதிகாரிகள் கரிசனை கொள்ளாமை காரணமாக மட் மாநாகரத்தில் பிரச்சினை

மட்டக்களப்பு மாநகரசபையின் 47வது சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் மாநகரசபை நகர மண்டபத்தில் கொரோணா நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியுடன் இடம்பெற்றது.இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்...

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள்...

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு அரசினால் வழங்கப்படும் நிதி உரிய நேரத்தில் கிடைப்பதில்லை – சுரேன்

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு அரசினால் வழங்கப்படும் நிதி உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

மறைந்த நடிகர் விவேக்கின் ஞாபகார்த்தமாக மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

மறைந்த நடிகர் விவேக்கின் ஞாபகார்த்தமாக மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பராசக்தி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை நாட்டி வைக்கப்பட்டது.https://youtu.be/R9tr0dPBscQமறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமின் நண்பரும், நடிகருமான விவேக்கின் மர...

உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்க மறுத்தார் தப்புல டி லிவேரா!

கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக தன்னை நியமித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக இலங்கையிலேயே தங்கியிருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பாணி தயாரிப்பை கைவிடுமாறு அறிவிப்பு

மருத்துவ பரிசோதனைகளில் தோல்வியுற்ற பாணி மருந்து தயாரிப்பை கைவிடுமாறு, அதனை உற்பத்தி செய்யும் தம்மிக்க பண்டாரவுக்கு எழுத்து மூலமாக இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள்...

திருமலை உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை முதல்தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை காவல்துறை அதிகார பிரிவின்...

மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரிடும்!

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மேலும் அதிகமாக இனங்காணப்பட்டால் மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.மக்கள் மிக அவதானமாக செயற்படாவிட்டால் கொரோனா...

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

இலங்கையில் மேலும் 02 மாவட்டங்களைச் சேர்ந்த 02 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்கம்மன...

கொரோனா தொற்றுக்குள்ளான 1,939 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,939 பேர் நேற்று (05) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 115,590 இலிருந்து...

இலங்கையில் மேலும் 14 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (05) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 720 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

இன்றும் 1259 பேருக்கு கொவிட்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1259 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த...

ஷானி அபேசேகர மீள விளக்கமறியலில்

உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை சோடித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இது...

ரிஷாட் எம்.பி நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை – சட்ட மா அதிபர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சட்ட...

மாலபேயில் கொவிட் தொற்றால் தம்பதியினர் உட்பட மூவர் பலி!

மாலபே பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளான மூவர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒரே வீட்டில் வசித்துவந்த கணவன், மனைவியும் அயல்வீட்டு பெண்ணொருவரும் அடங்குவதாக அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்கள் 84 –...

கொரோனா சிகிக்சை மையமாக மாறிய பூசா கடற்படை முகாம் !

காலி பூசா கடற்படை முகாமில் ஒரு இடைநிலை COVID-19 சிகிச்சை மையம் நிறுவப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 12 விடுதிகள் மற்றும் 162 படுக்கைகள் அங்கு உள்ளன. கடற்படையின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் நான்கு மாடி...

வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி முடக்கம் !

வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில், கடந்த வாரமளவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்ததுடன்...

யாழ் மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி முதலிடம் !

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி கனகேஸ்வரன் கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளைப்...

இன்றைய வானிலை !

சப்ரகமுவ, மத்திய, மேல், தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும்...

ஈச்சங்குளத்தில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.மோட்டார் சைக்கிள் ஒன்று வேக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து குறித்து...

4 மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

4 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் மஹரகம காவல்துறை அதிகாரப்பிரதேசத்திற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு...

கைக்குண்டுடன் ‘அலிவத்தே அசித’ கைது!

கிராண்ட்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி பகுதிகளில் இடம்பெற்ற குற்ற செயல்கள் மற்றும் மனித கொலையொன்றுடன் தொடர்புடைய  'அலிவத்தே அசித' என்பவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வவுனியா மற்றும் வவுனியா வடக்கின் பல பகுதிகளில் அரச புலனாய்வாளர் என கூறிக்கொண்டு வீடுகளில் சோதனை என்ற பெயரில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.சிவில் உடையில் அரச புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை...

வவுனியா மாவட்டம் உட்பட 04 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இலங்கையில் மேலும் 04 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்டத்தின் மஹரகம காவல்துறை அதிகாரப்பிரதேசத்திற்குட்பட்ட பமுனுவ...

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் தொடர்பில் எந்தவொரு யோசனையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.நேற்று (04) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர்...

நீதியமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு!

நீதியமைச்சு சம்பந்தமான செய்திகளை நீதியமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரே ஊடகங்களுக்கு வழங்க முடியும் எனவும் அதுவே உத்தியோகபூர்வமானது எனவும் நீதியமைச்சு அறிவித்துள்ளது.அது தொடர்பில் மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால் நீதியமைச்சர் அல்லது நீதியமைச்சின் செயலாளரினால்...

கொரோனா தொற்றுக்குள்ளான 1,914 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,914 பேர் நேற்று (04) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 113,676 இலிருந்து...

தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.அத்தடன், இது தொடர்பாக தொழில் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவது குறித்தும் தொழில்...

கடந்த ஏப்ரல் மாதத்தில் வீதி விபத்தில் 205 பேர் பலி !

ஏப்ரல் மாதத்தில் நாட்டில் பதிவான மோட்டார் வாகன விபத்துக்களில் 205 பேர் மரணித்துள்ளனர். கடந்த மாதத்தில் பதிவான 1,959 விபத்துக்களில் 1,254 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.மேற்கு மாகாணத்தில் 768 விபத்துக்கள் பதிவாகியுள்ளன,...

நுவரெலியாவில் ஒரேநாளில் 104 பேருக்குக் கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஹற்றன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...

நீரில் மூழ்கி பெண்ணும் இரு சிறுவர்களும் பலி!

திவுலபிட்டி- ஹல்பே - மனம்பெல்ல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட நீர் நிறைந்த குட்டையில் வீழ்ந்து பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.உயிாிழந்தவர்களுள் 42 வயதான தாயும், 10 வயதான அவரது மகனும் அடங்குவதாக...

ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்படாமை தொடர்பில் ஆராயுமாறு சபாநாயகர் அறிவுறுத்தல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்படாமை தொடர்பில் ஆராய்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை...

இரணைமடு குளத்திலிருந்து 3 போகம் செய்கை மேற்கொள்ள மகாவலி இணைப்பு இருப்பினும் விவசாயிகளாக ஏற்றுக்கொள்வோம்

இரணைமடு குளத்திலிருந்து 3 போகம் செய்கை மேற்கொள்ள மகாவலி இணைப்பு இருப்பினும் விவசாயிகளாக ஏற்றுக்கொள்வோம் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற...

இன்றைய வானிலை !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

ஆயிரம் ரூபா போலி நாணய தாள்களுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது !

கிளிநொச்சியில் அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே போலி நாணயளத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, எட்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள...

மேலும் சில இடங்களுக்குள் பொதுமக்கள் நுழைவது இடைநிறுத்தம்…

இலங்கையில் கொவிட்-19 தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதன் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தொடர்புறுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், மறு அறிவித்தல் வரை தொழில்...

பிரபாகரன் படத்தை மஹிந்தவிற்கு ரக் செய்தால் அவரை கைது செய்வீர்களா?: சாணக்கியன் ஆவேசம்!

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகனை, நேற்று (3) ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்தார்.https://youtu.be/Qs_VcSJP1SIஇதன் போது...

கொரோனா தொற்றுக்குள்ளான 1,923 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,923 பேர் நேற்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 111,753 இலிருந்து...

இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 13 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (03) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 696 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை வான் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது

பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை வான் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.பருத்தித்துறை சுப்பர்மடம் சுடலைக்கு முன்பாக இந்த கைது...

இலங்கையில் கொவிட் மரணம் 700ஐக் கடந்தது!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

வீதியில் திடீரென விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனாதொற்று உறுதி!

திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்த நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.வென்னப்புவ, புஜ்ஜம்பொலவை சேர்ந்த 50 வயதானவரே உயிரிழந்தார்.தென்னை மரமேறும் தினக்கூலியான இந்த நபர், புஜ்ஜம்பொல வீதியில் நேற்று திடீரென சரிந்து...

யாழ் சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தருக்கு கொரோனா!

சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் நேற்று மாலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் தொற்று...

விடுதலைப்புலிகளை ஊக்குவித்ததாக ஒருவர் கைது!

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.ஏறாவூர் – செங்கலடி பகுதியைச் சேர்ந்த 56 வயதான...

மட்டக்களப்பில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு ஏறாவூர் போலிஸ் பிரிக்குக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று காலை வீட்டில் இருந்து மீன் பிடிப்பதாக கூறி விபுலானந்தபுரம் பகுதிக்கு சென்ற மயிலம்பாவெளி பாடசாலை வீதியை சேர்ந்த...

யாழ் கொடிகாமத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று!

கொடிகாமம் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 5 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.கொடிகாமம் சந்தை, அந்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள் 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 சந்தை...

பருத்தித்துறையில் கஞ்சா வைத்திருந்த குற்றசாட்டில் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பகுதியில் கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவா்களிடம் இருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை நீதிமன்றில் முற்படுத்த...

பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை..

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை திங்கட்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது. மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இந்த பி.சி.ஆர் பரிசோதனை...

தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர்களின் இதயபூர்வ வாழ்த்துக்கள்

நடைபெற்று முடிந்த தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தங்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றதையிட்டும், தமிழகத்தின் அடுத்;த முதலமைச்சராக தாங்கள் பதவியேற்கவுள் ளதையிட்டும் புளகாங்கிதம் அடையும் அதேவேளை ஈழத்தமிழர்கள்...

நாங்கள் அதிகாரத்தில் இருந்த சந்தர்ப்பங்களில் ஊடக சுதந்திரத்தை பாதுகாத்தோம் – மகிந்த ராஜபக்ச

நாம் அதிகாரத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் அறியும் உரிமையையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி இன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே...

வட மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி

வட மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில்...

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (03)100 மில்லி மீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்...

இலங்கையில் மேலும் முடக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களின் 08 கிராம சேவகர் பிரிவுகள்

நாட்டின் ஐந்து மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்தின் - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மட்டிய...

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஸ்டாலின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – வேலுசாமி இராதாகிருஸ்ணன்

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த...

8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் - ஹங்குராங்கெத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரத்மட்டிய கிராம...

தொற்றாளர்களின் அதிகரிப்பால் வைத்தியசாலைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை!

ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம் முதல் மே மாதத்தின் ஆரம்பம் வரையான குறுகிய காலப்பகுதியில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொவிட் - 19 நோயாளர்களின் எண்ணிக்கை 11,000 ஆக அதிகரித்துள்ளது.ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி...

இன்றைய வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.சப்ரகமுவ, மத்திய, மேல்...

இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே! – அமைச்சர் டக்ளஸ்!

இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.நேற்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...

கொரோனா தாண்டவத்தில் இருந்து தப்பிக்க இந்திய பிரஜைகள் இலங்கைக்கு கடல் வழியாக!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றில் இருந்து தப்பிக்கும் முகமாக இந்திய பிரஜைகள் கடல் வழியாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சிப்பதான தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு, தூத்துக்குடி பகுதியில்...

கொரோனா தொற்றுக்குள்ளான 1,891 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,891 பேர் நேற்று (02) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 109,862 இலிருந்து...

இலங்கையில் மேலும் 09 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 09 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (02) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 687 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி அணிதிரள்வோம்

“உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி அணிதிரள்வோம்” எனும் தொணிப்பொருளில் புதியஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசக்கட்சியின் மேதினக்கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்றது.கட்சியின் வன்னி மாவட்டங்களிற்கான செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வு கொவிட்-19...

ஒட்சிசன் தேவை அதிகரிப்பால் இலங்கை பெரும் நெருக்கடிக்குள்!

தற்போது கோவிட் தொற்றுக்கான மிக முக்கியமான மருத்துவத் தேவையாக ஒக்சிசன் கருதப்படுகிறது.இந்த நிலையில் ஒக்சிசனின் கையிருப்பு குறைவாகவே உள்ள.எனவே அதிகாரிகள் ஒரு நெருக்கடியைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும்...

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திடீர் கைது!

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.பயங்கரவாத தடுப்பு பிரிவின் கணினி குற்றப்பிரிவினரால் அவர், செங்கலடியிலுள்ள வீட்டில் வைத்து இன்று இரவு 8 மணியளவில் கைது...

இறந்தவர்களிற்கு மத அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இறந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களது உறவுகள் அவர்களை நினைவுப்படுத்துவது அல்லது அவர்களிற்கு மத அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற...

பூநகரி கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்..

பூநகரி கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையில் இடம்பெற்றது.அக்கலந்தரையாடலில்...

திமுக கூட்டணி வெற்றிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வாழ்த்து!

தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்-2021 இல் 150 இற்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று திமுக கூட்டணி பெரும்பாலும் வெற்றியை அண்மித்துள்ள நிலையில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா...

ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களினால் வழங்கப்படும் சேவைகள் மீள அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி...

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்..

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மாகாண கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய,...

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது – ஐவர் கைது !

வவுனியா கொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள உணவம் ஒன்று சுகாதாரபிரிவினரால் நேற்று(சனிக்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் பிசிஆர்...

பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தை மரணம்!

மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் கூட மகன் கலந்து கொள்ள...

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட 04 மாவட்டங்களின் 07 கிராம சேவகர் பிரிவுகள்

இலங்கையின் கொழும்பு, காலி, அம்பாறை, இரத்தினபுரி ஆகிய 04 மாவட்டங்களின் 07 கிராம சேவகர் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (02) காலை 06 மணியுடன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்...

வட மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று…

வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில்...

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி …

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் புதிய சுகாதார வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் கைச்சாத்துடன் சுகாதார அமைச்சினால் நேற்று (01) வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,மொத்த விற்பனை நிலையங்கள்...

கொரோனா தொற்றுக்குள்ளான 1,716 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,716 பேர் நேற்று (01) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 108,146 இலிருந்து...

இலங்கையில் மேலும் 09 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 09 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (01) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 678 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

1044 லீற்றர் கொடாவுடன் ஒருவர் கைது!

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்துபுளியம்பொக்கணை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 1044 லீற்றர் கொடாவும் 88லீற்றர் கசிப்பும் பொலிசாரால்...

கடந்த 24 மணி நேரங்களில் முகக்கவசம் அணியாத 264 பேர் கைது!

இன்று காலை 8 மணி வரையான கடந்த 24 மணி நேரங்களில் இலங்கை முழுவதும் முககவசம் அணியாமல் நடமாடிய 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்...

மேலும் ஒரு வாரத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வாரகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சற்று முன்னர் விடுத்துள்ளார்.நாளை மறுதினத்துடன் பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த...

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததாக தெரிவித்து சிறையில் பிடித்து அடைக்கப்படுவாய் வவுனியாவில் அச்சுறுத்தல்

வவுனியா மன்னார்வீதி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள காணியில் இருந்து தன்னை எழும்பிச்செல்லுமாறு சிலர்மிரட்டுவதாக பூவரசங்குளம், பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக முறைப்பாட்டினை பதிவுசெய்த நபர் தெரிவிக்கையில்…..எனதுகாணியில் இருந்து...

உழைப்புக்கான உத்தரவாதம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே: பொ. ஐங்கரநேசன்

முதலாளி வர்க்கத்தால் ஈவிரக்கமின்றி நாள் முழுவதும் வேலை வாங்கப்பட்ட தொழிலாளிகள் இரத்தம்சிந்தி நிகழ்த்திய நெடிய போராட்டத்தின் விளைவாக வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் இந்த வெற்றி ஆண்டுதோறும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 1,662 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,662 பேர் நேற்று (30) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 106,484 இலிருந்து...

இலங்கையில் மேலும் 11 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (30) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 667 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

Stay Connected

6,870FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! விடுதி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பத் தீர்மானம் – பரீட்சைகள் திட்டமிடப்பட்டபடி நடக்கும்

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...

நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி !

நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர்களது மகன் நடிகர் சாந்தனு சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தங்களை...

உதயநிதி – ஆரி சந்திப்பு ! இனி தமிழ்நாட்டில் சூரியன் பிரகாசமாக ஒளிரட்டும்

நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இன்று முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.தமிழ் சினிமாவில்...