January 25, 2021, 2:30 pm

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து!

தமிழர் திருநாள் தைப்பொங்கல் கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் தானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது.

இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.

விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று அவர்கள் பிரார்த்திக்கின்றனர்.

இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம் மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது. இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Articles

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...