இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (05) இலங்கை வந்தடைந்தார்.
விசேட விமானம் மூலம் வந்தடைந்த அவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் தார பாலசூரிய மற்றும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர் நாளை (07) வரை இலங்கையில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்,ஷ வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட தலைவர்களையும் வர்த்தக தலைவர்களையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.