January 16, 2021, 12:06 am

இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! கிளிநொச்சியில் ஒலித்த குரல்

இலங்கை அரசே நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் எமது உறவுகளான அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! என அரசியல் கைதிகளின் குடும்பத்தவர்கள் உள்ளிட்டவர்களால் கிளிநொச்சியில் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர் பழைய கச்சேரிக்கு முன்பாக ஏ-9 வீதியில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற, நீண்ட காலமாக விடுதலையின்றி இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் ஆரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போதே அங்கு கலந்துகொண்டவர்களால் கோரப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பலருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஏதுமற்ற நிலையில் நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள பிள்ளையான், கருணா போன்றவர்களுக்கு விடுதலை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை. இது என்ன வகையில் நீதிஇலங்கை அரசே எமது உறவுகளை நீண்ட காலமாகச் சிறைகளில் அடைத்து வைத்துப் பழிவாங்காதே! எமது உறவினர்களையும் மனிதர்களாக நோக்கி உடன் விடுதலை செய்! இலங்கை அரசே குற்றமற்ற எமது உறவுகளை சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைத்திருப்பதன் உனது நோக்கம் என்ன? இலங்கை அரசே நீ தமிழர்களை ஏன் பழிவாங்குகின்றாய்? நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் எமது உறவுகளை உடன் விடுதலை செய்! இந்த நாட்டில் தமிழர்களை பழிவாங்குவதற்கான சட்டமா உள்ளது? எமது உறவுகளை உடன் விடுதலை செய்! போன்ற கோசங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.

மேற்படி அரசியல் பைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டத்தின் போது, அரசியல் கைதிகளின் உறவினர்களால் நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளியட்டவர்களுக்கு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், வடமாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபை தவிசாளர் சு.சுரேன், மேற்படி பிரதேசசபைகளின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

Stay Connected

6,163FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...