January 21, 2021, 4:28 am

இலங்கையில் வர்த்தமானி ஊடாக 1000 கோடிக்கு மேல் மோசடி! அதிர்ச்சித் தகவல்

சீனிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரித்தொகை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னள் நாடாளுமன்ற உறுப்பினரும் , கட்சியின் செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சீனிக்காக நிர்ணயிக்கப்பட்ட வரி தொகையை மாற்றம் செய்வது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான வரிப் பணம் கிடைக்கப்பெறாமல் போயுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல்களைக் தமக்கு சாதகமான பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இறக்குமதியாளர்கள் இலாபமீட்டிக் கொண்டுள்ளமை தொடர்பில், முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு முறைப்பாடு அளிக்கவே நாம் இங்கு வந்துள்ளோம்.

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர், அரச நிறுவனவங்களின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்த திட்டமிட்ட பண மோசடிக்கு இடமளிக்கும் வகையில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகாரச் சபை என்பன இணைந்தே தீர்மானங்களை எடுத்துள்ளன.

திருடர்களை பிடிப்பதற்காக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் , மக்களுக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிலும் நாம் இது தொடர்பில் முறைப்பாடு அளிக்கவுள்ளோம்.

ஆரம்பத்தில் , மத்தியவங்கி பிணைமுறிகள் ஊடாக மோசடிகளைச் செய்தனர். தற்போது வரி அறவீடுகள் ஊடாக மோசடி செய்து வருகின்றனர்.

தமது வர்த்தக நண்பர்களை போசித்துவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு நாம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

Related Articles

ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற மூவர்! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹற்றனைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதன்போது ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலையை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.அத்தோடு இந்நிலையில்...

கனடாவின் பிராம்டன் நகரில் அமைகிறது இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி

சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை...

கனடாவில் இன்று தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார்நாளை (வியாழன்) மெய்நிகர் நிகழ்வாக இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற மூவர்! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹற்றனைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதன்போது ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலையை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.அத்தோடு இந்நிலையில்...

கனடாவின் பிராம்டன் நகரில் அமைகிறது இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி

சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை...

கனடாவில் இன்று தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார்நாளை (வியாழன்) மெய்நிகர் நிகழ்வாக இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற...

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கொள்ளை!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட ஆலய குரு ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.அத்துடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார்...