இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (03) அறிவித்துள்ளார்.
212ஆவது மரணம்
வெலிப்பன்னை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையிலிருந்து, கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று (03) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர இருதய தொற்று மற்றம் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
213ஆவது மரணம்
கொழும்பு 15 (மட்டக்குளி/ மோதறை) பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து, கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று (03)மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, இருதய நோய் நிலை மற்றும் வலிப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 211 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 02 மரணங்களுடன் இதுவரை 213 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.