January 19, 2021, 3:13 pm

இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை! அதற்கு ஆதாரம் உண்டா?: சுரேன் ராகவன்

இலங்கையில் இனப்படுகொலை, போர்க்குற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டத்தை கனடாவின் ஒன்றாறியோ நாடாளுமன்றம் நிறைவேற்றினால், இலங்கையில் நல்லிணக்க செயற்பாடு முற்றாக சீர்குலைந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் அதன் இரண்டாவது வாசிப்பில் உள்ள 104 மசோதா ஒவ்வொரு ஆண்டும் மே 18 முதல் 25 வரை ‘தமிழ் இனப்படுகொலை கல்வி’ வாரத்தை நிறுவ முற்படுகிறது.

இது இயற்றப்பட்டு இயற்றப்பட்டால், ஒன்ராறியோ மாகாணத்தில் 4800 பாடசாலைகள் சட்டப்படி இலங்கையில் ஒரு தமிழ் இனப்படுகொலை நடந்ததை தங்கள் மாணவர்கள் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்றும் இது இலங்கையின் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் இலங்கை குடிமகனான வல்வெட்டித்துறையை சேர்ந்த விஜய் தணிகாசலம், இந்த பிரேரணையை சமர்ப்பித்தார் என்றும், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் எமது நல்லிணக்க செயற்பாடு சீர்குலைந்து விடும்.

அதோடு இலங்கையில் இனப்படுகொலை நடந்தது, போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென ஐ.நா அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாதென நான் கனடிய பிரதமர், ஒன்றாரியே பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என்றும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் எமது தற்போதைய, எதிர்கால நல்லிணக்க செயற்பாடுகளை முற்றாக சீர்குலைத்து, சமூகங்களை பிளவுபடுத்தி விடும். இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவித ஆதாரமுமின்றி நல்லிணக்கத்தை விரும்பாத சக்திகள் பிதற்றக் கூடாது எனவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இல்லாத நல்லிணக்கத்தை வைத்து சுரேன் ராகவன் மாரடிக்கிறார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

கொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி!

காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது!!!

Russian opposition leader Alexei Navalny is escorted by police officers after a court hearing, in Khimki outside Moscow, Russia January 18, 2021. Evgeny Feldman/Meduza/Handout...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

Stay Connected

6,303FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி!

காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது!!!

Russian opposition leader Alexei Navalny is escorted by police officers after a court hearing, in Khimki outside Moscow, Russia January 18, 2021. Evgeny Feldman/Meduza/Handout...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு!!!

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...

மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு

ஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...