வளிமண்டலவியல் திணைக்களம் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் இன்று பிற்பகலுக்கு பின் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கலாம் எனக் கூறி உள்ளது.
இந்நிலையில் இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று மாலை 5.20 மணிக்கு 6″ அளவுக்கு திறக்கப்பட்டுள்ளன.
எனவே இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளான முரசுமோட்டை பன்னங்கண்டி மருதநகர் ஊரியான் கண்டாவளை மற்றும் கனகராயன் ஆற்றின் ஓரப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://www.facebook.com/watch/?v=761909814416786
மழை வரத்து அதிகரிக்கும் சூழலில் மேலும் வான்கதவுகள் திறக்கப்படுவதற்காக சாத்தியம் உள்ளதாக இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.