January 23, 2021, 4:31 am

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு! மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் இன்று காலை 28 அடி 9 அங்குலத்தை எட்டியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கனகராயன் ஆற்றிலிருந்து நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றமையால் உயர்வடைந்து செல்கின்றது.
இந்நிலையில் 36 அடி நீர் கொள்ளளவைக் கொண்ட குளத்தின் நீர்மட்டமானது இன்று காலை 28 அடி 9 அங்குலத்தை எட்டியுள்ளது.
மாங்குளத்தில் கடந்த பன்னிரண்டு மணித்தியாலயத்தில் 87 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மேலும் குளத்தின் நீர்மட்டம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கிளிநொச்சி இரணைமடுச் சந்திக்கு அருகிலுள்ள கனகாம்பிகைக்குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் தற்போது இக்குளம் வான்பாய்கின்றது. இக்குளத்தின் கீழ்க்காணப்படும் கிராமங்களான் கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், பன்னக்கண்டி, பரவிப்பாஞ்சான், பரந்தன், சிவபுரம், உமையாள்புரம் போன்ற கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

Stay Connected

6,380FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...