January 22, 2021, 7:30 pm

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம்!

மூன்று வேளை நன்றாக சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலையை வடக்கு தமிழ் மக்கள் விரும்புகின்றனர். எனவே, இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம் என நாடாளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றும் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டன. வடக்கு மக்களின் உற்பத்திகளை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை உருவானது.

போருக்குப் பின்னர் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு மேல் மாகாணத்தில் இருந்த தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தோம்.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு என்ன நடந்தது? எல்லாம் நிறுத்தப்பட்டன. நல்லாட்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டன. ஆனால் வடக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் உரையாற்றுவதைச் செவிமடுக்கும்போது வேதனையளிக்கின்றது. இனவாதத்தைத் தூண்டுகின்றனர்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். தெற்கு மக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் அங்கு குரோத மனப்பான்மையை உருவாக்கியிருந்தனர். அங்குள்ள மக்களிடம் நாம் உரையாடினோம். மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலை உருவாகுவதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் புலம்பெயர் அமைப்புகளுக்கும் சோரம் போயுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள்தான் வடக்கு மக்களைக் குழப்பியுள்ளனர். எனவே, இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்கவும் இடமளிக்கமாட்டோம்.

ஆகவே, எம்முடன் கரம் கோர்த்துச் செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.

Related Articles

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...

Stay Connected

6,377FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் வேண்டும்!

தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின்...

அவுஸ்திரேலியா இனி ஒரு அணியே இல்லை! -இங்கிலாந்து முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான் அவுஸ்திரேலியா எல்லாம் இனி ஒரு அணியே இல்லை, இந்தியாவை தோற்கடிப்பதில் இங்கிலாந்து கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய...