January 24, 2021, 12:20 pm

இந்த நாட்டில் பிள்ளையானுக்கு ஒரு சட்டம் அரசியல் கைதிகளுக்கு இன்னொரு சட்டம்! சபையில் சுமந்திரன் காட்டம்

பிள்ளையான் விடுவிக்கப்பட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் நான்கரை ஆண்டுகள் பிணை வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் அவர் ஓர் அரசியல் கைதி எனவும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றில் கூறியிருந்தார். நான்கரை ஆண்டுகளை பாரிய காலமாக கூறப்படும் நிலையில் மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டதாகவும், எனினும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக இதுவரையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1983ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மனித படுகொலைகள் முதல் அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் வரையில் எந்தவொரு சம்பவத்திற்கும் தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலையில் கைதியொருவர் கொல்லப்படுவது என்பது அரசாங்கம் பொறுப்பிலிருக்கும் போது இடம்பெறும் கொலையாக கருதப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் நிச்சயமாக தண்டனை விதிக்கப்பட முடியும் என்ற போதிலும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானதாக அமைகின்றதா என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பாக சிறுபான்மை மக்கள் தொடர்பிலான வழக்குகளில் இந்த நிலைமையை காண முடிகின்றது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

Stay Connected

6,383FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...