விராட் கோலி ஐபிஎல் தொடரில் தோல்விகளால் துவண்ட நிலையில் இந்திய வீரர்களை தொடர்ந்து சீண்டி இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2020 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறி உள்ளது.
இந்த நிலையில், தான் விராட் கோலி மீது விமர்சனம் எழுந்துள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் இந்திய வீரர்களை சீண்டினார். சூர்யகுமார் யாதவ் மற்றும் மனிஷ் பாண்டே இருவரும் கோலிக்கு சரியான பதிலடி கொடுத்தும் இதில் குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ்வை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்ற விவாதம் நடந்த நிலையில், அந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தன்னை சீண்டிய போது சூர்யகுமார் பயப்படவில்லை. மாறாக அவரை முறைத்து, பின் அந்த இடத்தை விட்டு அமைதியாக வெளியேறினார்.
அந்தப் போட்டியில் பெங்களூர் அணியை கடைசி வரை களத்தில் நின்று வீழ்த்தி விட்டு தான் வெளியேறினார் சூர்யகுமார் யாதவ். அடுத்து பிளே-ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடிய போது அவர் மனிஷ் பாண்டேவை சீண்டினார்.
அப்போது ரன் எடுக்காமல் இருப்பது குறித்து மனிஷ் பாண்டேவை சீண்டினார் விராட் கோலி. அடுத்த இரு பந்துகள் கழித்து மனிஷ் பாண்டே சிக்ஸ் அடித்து பதிலடி கொடுத்தார். பாண்டே இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து கொண்டு, ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களை சீண்டுவது தவறான செயல் என பலரும் கூறி வருகின்றனர். எனினும், தோல்விகள் அடையும் போதெல்லாம் எதிரணியை சீண்டுவதை கோலி கடை பிடித்து வருகிறார்.