29.1 C
Jaffna
Friday, May 7, 2021

கொரோனா இரண்டாவது அலையால் 70 இலட்சம் இந்தியர்கள் வேலை இழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை அடுத்து பல பகுதிகளில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சுமார் 70 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் வேலையின்மை மார்ச் மாதத்தில் 6.5 வீதத்திலிருந்து 7.97 வீதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தரவுகள் கூறுகின்றன.

முடக்க நிலை காரணமாக புதிய வேலைவாய்ப்புக்கள் குறைந்து வருகின்றன. மே மாதத்தில் இந்த நிலை மேலும் மோசமாகி வேலையின்மை வீதம் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் முதல் அலையின்போது மாதக் கணக்கில் நீடித்த கடுமையான சமூக முடக்கல் காரணமாக மில்லியன் கணக்கான இந்தியர்கள் வேலையிழந்தனர். அத்துடன், உள்நாட்டு உற்பத்தியும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது அலையின்போது இறுதிக் கட்ட முயற்சியாகவே முடக்க நிலையை அமுல்செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மாநில அரசுகளைக் கோரி வருகிறார். எனினும் தொற்று நோயாளர் தொகை தீவிரமாக அதிகரிப்பதுடன், மரணங்களும் அதிகளவில் பதிவாகும் நிலையில் பல மாநிலங்கள் பகுதி அளவில் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸின் எழுச்சி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள முடக்க நிலையால் இந்திய உற்பத்தித் துறை பாதக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவானவர்கள் வேலை இழந்துள்ளதுடன், பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

Stay Connected

6,870FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது! நடேசன் சுந்தரேசன்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! பரீட்சைகள்?

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...