வீட்டிற்கு வெளியே காய்ந்து கொண்டிருந்த உள்ளாடையை இளைஞர் ஒருவர் திருடியுள்ள காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் சதார் காவல் நிலைய எல்லைப் பகுதியில் வசித்து வரும் சஞ்சய் சவுத்ரி என்பவர் காவல் நிலையத்தில் வினோதமான புகார் ஒன்றை கொடுத்தார்.
குறித்த புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் பொலிசார்.
இரண்டு இளைஞர்கள் தன்னுடைய மகளின் உள்ளாடைகளை திருடிச் சென்றதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
குறித்த காட்சியினை சோதனை செய்த போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் எதிரே வாகத்தினை நிறுத்திவிட்டு, சவுத்ரி வீட்டின் வெளியே காய்ந்து கொண்டிருந்த உள்ளாடையினை திருடிவிட்டு தனது ஸ்கூட்டியின் சீட்டிற்கு கீழே வைத்து பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
தவறு செய்த இரண்டு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்து விசாரித்துள்ளனர்.
வேடிக்கைக்காக இளம்பெண்ணின் உள்ளாடைகளை இவ்வாறு திருடுவதாக கூறியுள்ளனர்.
காணொளியினை அவதானித்தவர்கள் இதைக் கூடவா திருடுவீர்கள் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.