தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது.
இதையடுத்து, இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது.
அப்போது தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கியது.
இதனால் ஓடுபாதையின் ஓரத்தின் உள்ள மின்கம்பத்தில், விமானத்தின் இறக்கை மோதியது. இதில், இறக்கை பாதிப்படைந்தது. மின்கம்பமும் சாய்ந்தது. எனினும் சுதாரித்த பைலட், விமானத்தை அதே இடத்தில் நிறுத்தினார்.
இதன்பின்னர், பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.