March 8, 2021, 11:43 am

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி

காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்ற பெண் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாகியுள்ளார்.

உத்தபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச் சேர்ந்த சப்னம், அதே ஊரைச் சேர்ந்த சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், சப்னம் -சலீம் காதலை பெண் வீட்டார் ஏற்கவில்லை. சப்னம் எம்.ஏ வரை படித்து விட்டு அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார்.

நான்காம் வகுப்பு கூட தாண்டாத சலீமை அவர் காதலித்தது சப்னத்தின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, சப்னம் தன் காதலருடன் சேர்ந்து தன் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தன் குடும்பத்தினருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து மயங்க செய்துள்ளார். பின்னர், தன் பெற்றோர், இரண்டு அண்ணன்கள், அவர்களின் இரு மனைவிகள், அண்ணனின் 10 மாத ஆண் குழந்தை ஆகியோரை தன் காதலருடன் சேர்ந்து சப்னம் கொலை செய்தார்.

இந்த வழக்கு அம்ரோ மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டு சப்னம் மற்றும் சலீமுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் இருவரின் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும், சப்னத்தின் கருணைமனுவையும் உத்தரபிரதேச மாநில கவர்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் தள்ளுபடி செய்து விட்டனர்.

தற்போது, சலீம் ஆக்ரா சிறையிலும் சப்னம் ராம்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரா மாவட்ட நிர்வாகம் சப்னத்தை தூக்கிலிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில், டெத் வார்ரன்ட் வழங்கப்படும் என்று தெரிகிறது. டெத் வாரன்ட் வழங்கப்பட்டதும் மதுரா சிறைக்கு சப்னா மாற்றப்பட்டு தூக்கிலிடப்படுவார்.

நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட்ட பவான் ஜலாட்தான் சப்னத்தையும் தூக்கில் போடுகிறார். ஆனால், சப்னத்தை தூக்கிலிடப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தியாவில் மதுரா சிறையில் மட்டும்தான் பெண்களை தூக்கிலிடும் அறை உள்ளது. முன்னதாக, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பல பெண் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், சப்னம் விஷயத்தில் மரண தண்டனை குறைக்கப்படவில்லை. 150 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் 1870 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். சுதந்திரத்துக்கு பிறகு, தூக்கிலிடப்படும் முதல் பெண் சப்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண், மறுநாளான இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றே காரணம்...

பாடசாலை சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன.காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற மாணவியே கொரோனா தொற்றுக்குள்ளான விஷ்மி விஹாங்காய...

மினி சூறாவளியால் டிக்கோயாவில் 23 குடியிருப்புகள் சேதம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா படல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அத்தோட்டத்திலுள்ள 23 தொடர் மற்றும் தனிகுடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில்...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண், மறுநாளான இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றே காரணம்...

பாடசாலை சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன.காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற மாணவியே கொரோனா தொற்றுக்குள்ளான விஷ்மி விஹாங்காய...

மினி சூறாவளியால் டிக்கோயாவில் 23 குடியிருப்புகள் சேதம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா படல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அத்தோட்டத்திலுள்ள 23 தொடர் மற்றும் தனிகுடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க தயார்

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவின் அறிக்கை மார்ச் 15ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென அக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

முதலாம் தவணைக்காக திட்டமிட்டப்படி மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து மாகாணங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...