February 25, 2021, 10:24 pm

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான் இரட்டை இலை சின்னத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். அதன்படி தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையில் நாம் தலையிட கூடாது.

சசிகலா தன்னை முதல்வராக்கவில்லை எம்.எல்.ஏ.க்கள் தன்னை முதல்வராக்கியுள்ளனர் என்று முதல்வர் கூறிவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாஸ் கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கு இருந்த எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றாகத் தெரியும். தற்போது அங்கு நடைபெற்றதை நான் கூறமாட்டேன். அதற்கென்று நேரம் காலம் வரும் போது கூறுவேன்.

முக்குலத்தோருக்கு 25% இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று பலமுறை தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். ஐந்து ஆண்டுகளில் அரசியலில் எவ்வளவு மாற்றங்கள் வந்துள்ளது.

நாளை என்ன நடக்கும் என்று அறுதியிட்டு கூறமுடியாது. சசிகலா முதலில் வெளியே வரவேண்டும். அவர்கள் வெளியே வந்த பிறகு அவர்களின் மனநிலை என்ன என்பதை கூற வேண்டும்.

முக்குலத்தோர் புலிப்படைக்கு அரசியல் அங்கீகாரம் அளித்து கடந்த சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பளித்ததில் சசிகலாவும் ஒருவர். அவர் வெளியே வந்த பிறகு அவர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை பார்த்த பிறகு என்னுடைய நிலைப்பாடு இருக்கும்’ என்று தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Related Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...