மதிமுக தலைவர் வைகோ அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் இடம்பெற்றது.
இவ் நிகழ்வானது, யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை, இலங்கை அரசின் அறிவுறுத்தலின் படி, அதை அகற்றிய யாழ் துணைவேந்தர் சற்குணராஜாவிற்கும் மற்றும் இலங்கை அரசிற்கும், தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் பாரிய கண்டனத்தை தெரிவித்தார்கள் !
இதில் பங்கு பற்றிய அரசியல் கட்சி தலைவர்கள் & பிரதிநிதிகள்:
மதிமுக: வைகோ
திமுக: இளங்கோவன்
விசிக: வன்னியரசு
CPI: முத்தரசன்
திக: கொளத்தூர் மணி
TVK: வேல்முருகன்
மே 17: திருமுருகன் காந்தி
இயக்குனர் கவுதமன்
மற்றும் பல இஸ்லாமிய கட்சித் தலைவர்களும், ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாக, ஒரே குரலில் ஒலித்தார்கள் !
ஆனாலும், மற்றைய கட்சியினரும் மற்றும் தமிழக முதல்வரும் தங்களின் கண்டனத்தை, இலங்கை அரசுக்கு பதிவு செய்துள்ளார்கள் !
இந்த முள்ளிவாய்க்கால் தூபி விடையமாக, ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாக, தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரே குரலாக ஒலித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்