தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய செயலாளராக இருந்த ரவிராஜா, மற்றும் துணை செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
தற்போது இவர்கள் இருவரும் வீட்டை காலி செய்யாமல் இருப்பதால், இருவரையும் காலி செய்து தரும்படி நடிகர் விஜய் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.