கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு பரவமல் தடுக்கும் முயற்சியாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடாவும் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களைத் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தடை செய்துள்ளன.
வேறு பல நாடுகளும் இந்தத் தடை குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இந்நிலையில் பல ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்தது இங்கிலாந்தியில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் தடை செய்யப்படுவதாக கனடா விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சரக்கு விமானங்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக அவசரமாகத் தடையிறங்குதல் உள்ளிட்டவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.
கனேடியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்தத் தடை அவசியம் என போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுப்பாடுகள் ஆரம்பத்தில் 72 மணிநேரங்களுக்கு அமுலில் இருக்கும்.
அதன் பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என கனடா பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கிலாந்தில் இருந்து அண்மைய நாட்களில் கனடாவுக்கு வந்த பயணிகள் விசேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மரபணு ரீதியாக மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவது அந்நாட்டில் கடும் அச்சத்தை ஏற்கடுத்தியுள்ளது.
புதிய வகை கொரோனா பரவலை அடுத்து அங்கிலாந்து ஏற்கனவே அமுல் செய்திருந்த கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
புத்தாண்டை ஒட்டி அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்துத்தும் திட்டமும் இரத்துச் செய்யப்படுவதாக இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.