January 18, 2021, 5:59 pm

இங்கிலாந்தில் வெறிச்சோடி காணப்படும் பொது போக்குவரத்து!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.

அங்கு இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்து உடனான விமான சேவையை ரத்து செய்தன.

இதற்கிடையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 4-ம் படி நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 784 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடுமுழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.

அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் இங்கிலாந்து முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) நடுப்பகுதி வரை அமலில் இருக்கும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் வரும் வாரங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என போரிஸ் ஜான்சன் எச்சரித்தார்.

எனவே மக்கள் அனைவரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளின் கீழ் நாடு முழுவதும் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், மாணவர்கள் அனைவரும் தொலைதூர கற்றல் முறைக்கு மாற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோல் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஸ்காட்லாந்திலும் தளர்வு இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Related Articles

திடீரென மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினால் நுவரெலியாவில் தொடர்ந்தும் பதற்றம்!- விசேட அதிரடிபடையினர் குவிப்பு

நுவரெலியா- கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை...

பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஆங்காங்கே ஒன்றுகூடும் எதிர்ப்பாளர்களால் கடும் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக நாளை மறுத்தினம் புதன்கிழமை ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் மாகாண அரசு தலைமையகங்கள் முன்பாக ஆயுதம் ஏந்திய சிலர் உட்பட சிறிய அளவிலான எதிர்ப்பாளர்கள் கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.வொஷிங்டனில்...

கனடாவில் சடுதியாக அதிகரிக்கும் உயிரிழப்பு; மொத்த கொரோனா பலி 18,000 –ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 149 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில் நாட்டில் பதிவானமொத்த கொரோனா மரணங்கள் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளன.ஞாயிற்றுக்கிழமை கனடா முழுவதும் 6,433 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்...

Stay Connected

6,241FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

காணி சுவீகரிப்பதற்காக பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை

விருந்தினர் விடுதி ஒன்று அமைப்பதற்காக மக்களின் காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.முன்னதாக ஒன்று திரண்ட மக்கள்...

யாழில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படுகின்றன !

டந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்றைய தினம்...