January 23, 2021, 3:59 am

ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன் இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்!

இது என்ன டிசைன்…? சபாஷ் சரியான போட்டி!

ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன்
இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்!

உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்குக்கு
சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பிவைப்பு

யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரைப் போட்டியிட அனுமதித்தமை சட்டத் தவறு எனத் தெரிவித்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.பற்றிக் டிரஞ்சனுக்கு தனது சட்டத்தரணி ஊடாக சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பியுள்ளார் யாழ் மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் முத்து முகம்மது நிபாகர்.

ஐக்கிய தமிழ் சட்ட நடவடிக்கைக் கவுன்ஸிலின் ஸ்தாபகர் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் ஊடாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டத்தினால் ‘பதவியை இராஜினாமாச் செய்தவர்’ என வகைப்படுத்தப்பட்ட இமானுவேல் ஆனோல்ட்டை மீண்டும் தேர்வுக்கு அனுமதித்தமை சட்டத் தவறு –

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர சபை உறுப்பினரே மேயர் பதவிக்குப் போட்டியிடலாம் என்றுதான் சட்டம் கூறுகின்றது. பட்டியல் மூலம் மாநகர சபை உறுப்பினர் நியமனம் பெற்ற மணிவண்ணனை இந்தப் பதவித் தேர்வுக்கு அனுமதித்தமையும் சட்டத் தவறு –

என்பன உட்பட பல விடயங்கள் இந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

யாழ் மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை, அவரது கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டமை உட்பட பல விடயங்கள் இக் கடித்தத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சட்டத்தவறை ஐந்து நாள்களுக்குள் திருத்தி மீளவும் சட்டத்துக்கு உட்பட்டு, சட்ட ரீதியான முறையில் புதிதாக மேயர் தெரிவை நடத்துமாறும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் இமானுவேல் ஆனோல்ட், மணிவண்ணன், யாழ் மாநகர சபை ஆணையாளர், பிரதி மேயர் து.ஈசன், யாழ் மாநகர சபை செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடக்கு ஆளுநர், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன், அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன.

இதேவேளை, யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் பலரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் யாழ்.மாநகரசபை மேயர் தெரிவில் தமது விருப்பத்துக்கு மாறாக ஆர்னோல்ட்டுக்கு வாக்களிக்கும் படி நிர்ப்பந்திக்கப்பட்டோம் அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது தொடர்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். சிரேஷ்ட உப தலைவர் ஊடகசந்திப்பு நடத்தி உறுப்பினர்களின் மீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தெல்லியூர் சி ஹரிகரன்.

Related Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

Stay Connected

6,380FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...